ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த கைது நடவடிக்கை அண்மை காலமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அதிகபட்ச அபராதம் , மீனவர்களுக்கு நீதிமன்ற காவல், படகுகள் அரசுடைமையாக்கப்படுவது என தொடர்ந்து இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில், நேற்று 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து வந்த […]
தமிழக மீனவர்களை மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்ற்னர். கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட […]
சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், நெடுந்தீவு அருகே 15 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனையடுத்து, இலங்கை கைது செய்த மீனவர்கள் 38 பேரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க […]
அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை. ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மீன்வளத்துறை அறிவிப்பை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு […]
ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கும் நகைகளின் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு அபராத தொகையுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்மனுக்கு மாசி மாதம் திருவிழா, சித்திரை மாத திருவிழா, ஆடி மாத திருவிழா ஆகியவற்றிற்கு குருக்களால் அணிவிக்கப்படும் ஆபரண நகைகளை திருவிழா முடிந்த உடன் கோயில் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பத்திரமாக குருக்களே வைத்து விடுவார்கள். 40 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு நகை மதிப்பீட்டாளர்கள் கணக்கெடுக்கும் பணியை […]
தமிழக அரசு இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அடுக்கடுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க கோரிய இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுகள் […]
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகிய பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் பாம்பன் பாலத்தில் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும் கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு […]
ராமஸே்வரம் : பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். ஆழ்கடலுக்குள் சென்ற 51 படகுகளில் 27 படகுகள் பல்வேறு கடற்கரை பகுதிகளில் கரை திரும்பின. எஞ்சியுள்ள 24 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுத்தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 16 […]
ராமேஸ்வரத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை, அனைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மீனவர்கள் பிரச்சனை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும் என்றார். source: dinasuvadu.com