நெல்லையில் கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அணைகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு வழங்குவோம். நியூட்ரினோ திட்டம் குறித்து அறிவியல் ரீதியாக ஆலோசனை நடத்தி வருகிறோம், ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்படும்.தமிழக மக்களும், கேரள மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.