டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை பிரதான கட்சியினர் ஆரம்பித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லி முதலமைச்சர் அதிஷி போட்டியிடும் கல்காஜி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி என்பவர் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக அதிஷி குடும்ப […]