பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2வது தங்கம் கிடைத்துள்ளது. 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் 5வது நாளான இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது போல், பாரா ஆசிய விளையாட்டிலும் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். […]