ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் என தகவல். தமிழக முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால், நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 10ம் வகுப்பு […]
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் […]
மதுரை:ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் உடலை மறுஉடற்கூராய்வு செய்வதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் […]
ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில்,இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக […]
ராமநாதபுரம் அருகே உள்ள கள்ளரி தெரு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருடைய மகன் அருண் பிரகாஷ். மேலும் அருண் பிரகாஷ் நண்பர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலகாரணங்களால் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் நேற்று பகலில் அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் யோகேஸ்வரன் என்பவரும் அப்பகுதியில் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அருண்பிரகாஷ் முதுகு பகுதியில் கத்தியால் குத்தினர், அவருடன் இருந்த அவரது நண்பர் யோகேஷ்வரனிற்கும் வயிற்றில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக பல நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள்கொரோனா வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து, சில மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்து கடை தவிர பிற கடைகள் மதியம் 3 மணி வரை மட்டுமே இயங்கும் என […]
எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். நேற்று வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இதன் பின்னர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் […]
அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் . ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம். அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் […]
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவ வசதி பெறும் எண்ணத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் […]
ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பங்கேற்றனர் . மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது.
ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி பகுதியில் கல்குண்டு எனும் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் மின்மோட்டாரை இயக்கும் பொத்தான் சரிவர வேலை செய்யததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் கார்த்தீஸ்வரன் எனும் மாணவன் அந்த மின்மோட்டாரை ஆன் செய்கையில் மின்சாரம் தாக்கி அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி என்ற ஊரில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன், தனது தொழில் தொடங்குவது சம்பந்தமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நான்கு என அனைவரும் நட்பாக பழகி உள்ளனர். பிறகு, அவரை ரஷ்யா மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த […]
பாகிஸ்தானிடமிருந்து இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் வைக்கப்பட்ட பேனரில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின் மிராஜ் […]
ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த படகிலிருந்த கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.இந்நிலையில் இதனை கண்ட சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு பத்திரமாக கொண்டு […]
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அரபு நாட்டில் வேலை செய்து வந்தவரின் மனைவியிடம் வேறு ஒருவர் வைத்த தொடர்பை கண்டிக்க சொல்லி காவல்நிலையம் அழைத்து சென்ற போது விசாரணை நடத்திய காவல்துறையினர் கண்டிப்பதை விட்டுவிட்டு விருப்பிய பையனுடன் போலீசாரே அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசாருடன் அந்த பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் செய்த போது போலீஸ் அதிகாரி , சட்டமே சொல்லி விட்டதாம் யாரு பொண்டாட்டிய யாரு வேணும்னாலும் கூட்டிட்டு போகலாம் என்று […]
இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று […]