மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, மேலும் இந்த கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வருண்குமார் உத்தரவின் […]
பெரும்பாலான ஊர்களில் கோடை காலம் வந்தால்தான் தண்ணீரின் அருமை தெரிகிறது. தண்ணீர் சிக்கனம் அளவாக பயன்படுத்த கூறுகிறோம். ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தண்ணீருக்கு கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருத்தேர்வலசை கிராம மக்கள். இவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஐந்தாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நீர்த்தேக்க தொட்டிஇருந்தும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. இதனால் தினம் தினம் மக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் காவிரி குடிநீர் திட்ட […]
இராமநாதபுரத்தில் உள்ள கீழமுந்தல் மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இவர்களின் மீனை விற்பனை செய்வதற்காக இங்கு மீன் ஏலக்கூடம் இல்லாததால், சாலைகளில் வைத்து மீன்களை ஏலம் விட்டு வந்தனர்.இந்நிலையில் தங்களுக்கு மீனை ஏலம் விட்டு விற்பனை செய்ய ஏலக் கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 28ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர், கப்பலைக் கொண்டு மோதி விசைப்படகை மூழ்கடித்தனர். படகில் இருந்து குதித்து நீந்திய மீனவர்கள் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மழை பெய்து வருவதால் இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் அளிவித்துள்ளார். DINASUVADU
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் ராமேஸ்வரம் , பாம்பன்,மண்டபம்,கீழக்கரை உள்ளிட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கஜா புயலாக மாறியுள்ள நிலையில் இந்த புயல் வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும்,வட […]
தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. DINASUVADU
பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களுடன் சண்டையிட்ட காவலாளியை அரிவாளால் கொள்ளையர்கள் வெட்டிய நிலையிலும் போராடியுள்ளார். இராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கையில் பிரசிதிபெற்ற நடராஜர் ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.உலகிலே பெரிய மரகத கல்லால் வடிவமைக்கப்பட்ட சிரித்த முகம் கொண்ட 5 1\2 அடி சிலை இதுவாகும்.இத்தகைய சிலையை கொள்ளையடிக்க முயற்சித்தது கொடூரத்தின் உச்சமாகும். எப்பொழுதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் காட்சி தரும் இந்த சிலைய நேற்று […]
2 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் இன்றிரவு 10 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும் மேலும் கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் […]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்… நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 2படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 12 தமிழக மீனவர்கள் இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தவயல் அருகே அரசு பேருந்து ஒன்று கட்டுபாடின்றி வந்து ஒரு கார் மீது மோதியது. இந்த கார் பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது அரசு பேருந்து வந்து மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் 5 பேர் படுகாயமுற்று அருகில் உள்ள மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். source : dinasuvadu.com