டீசல் விலை உயர்வைக் குறைத்தல், மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 120க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடலுக்கு செல்லப் போவதில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். DINASUVADU