உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் ஜன்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி தருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை பணம் தாக்கரேவின் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம் என்றும், அரசாங்க பணம் இல்லையென்றும் அவர் ஒரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதிவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில், நினைவுகூரும் வகையில் தனது மகன் ஆதித்யாவுடன் அயோத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.