காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் ராகேஷ் பண்டிடா சோம்நாத் அவர்கள் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் அவ்வப்போது அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ட்ரல் நகராட்சியின் கவுன்சிலராக செயல்பட்டு வந்தவர் தான் பாஜக கட்சியை சேர்ந்த ராகேஷ் பண்டிடா சோம்நாத். இவர் ஸ்ரீநகரில் போலீசாரின் பாதுகாப்புடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]