டிசம்பர் 17-ல் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அறிவிப்பு. தமிழகத்தில் டிசம்பர் 17-ல் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகயாத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகைக்கு ஏற்ப ஆலோசனை நடைபெறுவதாக பாரதிய கிசான் சங்கம் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எங்களிடம் அரசு பேச வேண்டும், அப்பொழுது தான் போராட்டம் முற்று பெறும் என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருப்பினும், அறிவிப்புடன் நிறுத்தி விடாமல் அதை அமல்படுத்த […]