எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்தார்.நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் […]
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ். மாநிலங்களவையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், […]