தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வருகிற 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜூ, என். ஆர் இளங்கோ ஆகியோர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பாக விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எம்.பி தேர்தலுக்கான வேட்பு […]
தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்தமாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் மொத்தமாக 17 மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த இடங்களை […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் […]
மாநிலங்களவை தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற்றார் திமுகவின் என்.ஆர் இளங்கோ தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை […]
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு […]
திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வைகோ. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.அப்பொழுது அவர் கூறுகையில்,மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பற்றி சிந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த […]