Sudha Murty : இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கல்வியாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய அரசின் முதல் அங்கீகாரம்.! விருதுகளை வழங்கினார் பிரதமர் மோடி.! […]
JP Nadda: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனது மாநிலங்களவை எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவையின் சேர்மன் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் குஜராத்தில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்தே ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களவை பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் […]
பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார். பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார். பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து […]
கோவா முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ ஃபலேரோ மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோவாவின் முன்னாள் முதல்வர், 7 முறை எம்.எல்.ஏ மற்றும் கோவாவின் பெரிய அரசியல் முகமான லூய்சின்ஹோ பலேரோ இந்த ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸில் இருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு, பாஜக மற்றும் அதன் பிளவுபடுத்தும் கொள்கைகளை தோற்கடிப்பேன் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கியது. […]
மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி.யாக […]
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்தாமல் 9 மாநிலங்களவை எம்.பிக்கள் இருப்பதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது. ஒன்பது மாநிலங்களவை எம்.பிக்கள் இதுவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தவில்லை. மேலவையில் உள்ள 232 எம்.பிக்களில் இதுவரை 179 எம்.பிக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தொடர் அமர்வுக்கு முன்னதாக அனைத்து எம்.பிக்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருந்தார். கொரோனா தொற்று காரணத்தால் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் ரத்து […]
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமன எம்.பி.யாக அறிவித்தார்.