பேரறிவாளன் பரோல் நிராகரிப்பு – தமிழக அரசு தகவல்

ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு பரோல் கோரி அவரது தாய் அளித்த மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டது. ராஜீவ் காந்தி கடந்த 1991 -ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது 7 பேரும் சிறைதண்டனை … Read more

#BREAKING: விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு -தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

நளினி தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.   ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.   … Read more

ராஜீவ் கொலை வழக்கு : நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று  மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

7 பேர் விடுதலை :ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை  உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.மேலும் வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் … Read more