உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலால் குண்டு வைத்து கொல்லப்பட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல் மீது ஆர்வமில்லாமல், விமான ஓட்டியாக தனது வாழ்வை நிகழ்த்திய ராஜீவ் காந்தி தன் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்திய அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையில் நடைபெற்று வந்த […]
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையா,இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் டெல்லி வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்க்ஷேயை விமான நிலையத்தில் சுப்பிரமணியசுவாமி வரவேற்றார். விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக இந்தியா வந்துள்ளார். அவர் கூறியதாவது,எங்கள் நாட்டில் ராஜீவ் கொலை குற்றவாளியை நாங்கள் தண்டித்துவிட்டோம்.இங்கு உள்ள குற்றவாளிகள் குறித்து இந்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும்,என்று தெரிவித்தார்.