ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை வரும் 12ம் தேதி திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த சந்துக்கவுள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த சந்திப்பு நிகழவுள்ளது. மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.