#Breaking: மக்கள் மன்றம் கலைப்பு.. அரசியலில் ஈடுபடமாட்டேன் – ரஜினிகாந்த் அறிவிப்பு!

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ரஜினி மக்கள் … Read more

ரஜினிகாந்த் கூறியதில் இருந்து கிளற வேண்டாம் – கமல்ஹாசன் கருத்து

உங்களுக்கு விவரம் வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை … Read more

ரஜினிகாந்த் ஆதரவு பாஜகவிற்கு தேவையா ? குஷ்பு விளக்கம்

ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில்  ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், … Read more

ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார்.ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார் ரஜினி.பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின் … Read more

அற்புதம்… அதிசயம்… நிகழாமல் முடிவடைந்த ரஜினியின் அரசியல்..!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்து நிலையில்,தற்போது தொடங்க வில்லை என்று அறிவித்தது ஏமாற்றமாக அமைந்துள்ளது.  ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் , ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார். ஆனால் இந்த சந்திப்புகள் ஒவ்வொரு முறையும் நடைபெறும்போது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி சந்தித்தது தான் மிகவும் முக்கியமான சந்திப்பாகும். கடந்த 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பில் நடந்தது என்ன ? … Read more

தலைவா..வா..வா.,கோஷமிட்டு ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா போராட்டம்.!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய நிலையில், அவரது வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் கோஷமிட்டு தர்ணா போராட்டம். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இன்னும் 2 நாட்களில் ரஜினி கட்சி துவங்குவதற்க்கான அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று ரஜினி தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர … Read more

கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு ! முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அர்ஜுன மூர்த்தி ட்வீட்

கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில் ,முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.இன்னும் 2 நாட்களில் ரஜினி கட்சி துவங்குவதற்க்கான அறிவிப்பை … Read more

அரசியலுக்கு வராதது ஏமாற்றம் ,ஆனால் நலமாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன் கருத்து

என் ரஜினி நலமாக இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு இடையில் ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.இதன் பின்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினி சென்னை திரும்பினார்.ஆனால் அவரது அரசியல் அறிவிப்பு … Read more

ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? கமல்ஹாசன் பதில்

ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என  பேசி முடிவெடுப்போம் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வரும் நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதையடுத்துவிருதுநகர்,தேனி ,தூத்துக்குடி  தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இதனிடையே செய்தியாளர்களிடம் … Read more

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் – ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு

தேர்தல் சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் என்று  ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார். இதனிடையே நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற … Read more