நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் தலைவா நீங்கள் ஆள வேண்டும்! என்று நடிகர் ரஜினி வீட்டின் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அனைத்தும் சமீபகாலமாக வெளியாகிய வண்ணம் கடந்த வாரம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. […]