ரஜினி மக்கள் மன்றம் வடசென்னை மாவட்ட தொழில்நுட்ப அணியினர் திமுக மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளியை சீரமைத்துள்ளனர்.இதனை ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் கடந்த 20ம் தேதி திறந்து வைத்திருக்கிறார். அப்போது கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறார். ஆனால், அந்த கல்வெட்டு அகற்றப்பட்டது. இதை திமுகவினர் தான் அகற்றியிருப்பார்கள் என்று ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக! என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.