ரஜினிகாந்த் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். என்னால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், தூய்மையான அரசியல் என்றால்ஆன்மீக அரசியல் என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளதை பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது”ரஜினிகாந்த் மலையேறிவிட்டார் என்று பதில்கூறினார்
நடிகர்கள் அரசியலுக்குள் குதிப்பது தற்போது சாதாரமாகிவிட்டது. ரஜினியும், கமலஹாசனும் தங்கள் பங்கிற்கு அரசியல் பேசி கொண்டிருக்கின்றனர். இதில் கமலஹாசன் மதுரையில் திடீரென தனது கட்சி கொடியையும், கட்சியின் பெயரையும் அறிவித்து அரசியலில் இறங்கிவிட்டார். ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல வருடங்களாக அதிமுகவில் இருக்கும் நடிகர் ராமராஜன் புதுச்சேரியில் அதிமுக கட்சி கூட்டத்தில் பேசும்போது, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உடனே அரசியலில் இறங்கி முதலமைச்சராகவில்லை. அவர்கள் பல வருடங்களாக மக்கள் […]
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி ரசிகர்கள் நடத்திய கூட்டத்தில் வீடியோவில் பேசினார். அதில், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். மேலும், “அரசியல் என்பது சுயநலமல்ல பொதுநலம். மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டுவிட்டு […]
சென்னையில் கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். அதன் முதல்கட்டமாக ரசிகர் மன்றங்களை இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக தனி இணையதளத்தையும் தொடங்கியுள் ளார் இந்நிலையில், மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் கலந்துகொண்ட ரஜினி, ‘‘என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் […]
சூப்பர்ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக கடந்த வாரம் சந்தித்து போட்டோக்கள் எடுத்து கொண்டார். அப்போது அவரிடம் வரும் ரசிகர்கள் கொடுத்த வித்தியாச வித்தியாசமான போஸ்கள் அனைத்தும் பார்க்கும் பொழுது நகைச்சுவையாக உள்ளது. அப்படி பட்ட சில போஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ உங்களுக்காக இங்கு கிளிக் செய்க-https://youtu.be/CQ1CPBFC16M?t=38 ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொடுத்த போட்டோகள்:
இசைப்புயல் ஏஆர்.ரகுமான்இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ரஜினி அரசியல் வருகை குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பதிலளித்தார். அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதாகத்தான் தெரிகிறது எனவும் அவரது ஆன்மீக அரசியல் மதசார்பற்ற அரசியல் என்று தான் கூறினார் எனவும் அந்த ஆன்மீக அரசியலை பற்றி அவர்தான் கூறவேண்டும். என்றும் தெரிவித்ததார். மேலும், தனக்கு 25ஆண்டு காலம் ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். source : dinasuvadu.com
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தித்து பேசினார். இன்று எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தித்து பேசினார். இந்நிலையில் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு சொல்லும் பின்-ஆப் ரஜினியின் சொத்து மதிப்பு, அவரது வாகனங்கள், அவர் கட்டிய வரி என அனைத்தையும் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.360 கோடி எனவும், […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிக பெரிய தீவிர ரசிகனான ராகவா லாரன்ஸ் அவரது அரசியல் பயணம் குறித்த தகவலை நாளை வெளியிடுவதாக இருந்தார்.இந்நிலையில் காஞ்சனா 3 படப்பிடிப்பில் இருந்த அவருக்கு தனது ரசிகர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் கடலூருக்கு சென்றுள்ளார்.ஆகையால் அவர் தனது அரசியல் அறிவிப்பை பற்றி வரும் ஜனவரி 7ஆம் தேதி கூறுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேஷம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார் .அன்று முதல் இன்று வரை வரவேற்ப்பும் சரி சர்ச்சையும் ஏற்படுத்திவருகிறது .இந்நிலையில் இணையதளம் மற்றும் ஆப் மூலம் உறுப்பினராக சேரலாம் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும், ஆர்வமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் திடீர்திடீரென்று அரசியல் கட்சியை ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பலர் […]
ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில் அவருக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்த்தும் வருகின்றார். இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார். அவரது அரசியல் வருகையை பற்றி கருத்து தெரிவித்து வரும் திருமாவளவன், தற்போது, ‘மக்கள் ரஜினிக்கு தகுந்த நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள். மேலும், திரை வெளிச்சம் மட்டும் போதும் என ரஜினி அரசியலுக்கு வந்துள்ளார்.’ என அவர் தெரிவித்தார். source : dinasuvadu.com
ரஜினி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டாதோடு கூடவே ஆன்மீக அரசியல் என்று கூறியதால் பெரும் சர்சையாகி உள்ளது. இந்நிலையில் தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியை பா.ஜ.க. இயக்குவதாகவும், ரஜினியுடன் கூட்டணிக்கு ஏங்குவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது என்றார்.தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான […]
நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விரைவில் கட்சி பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பதாக கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக கூறினார். நேற்று தனது அரசியல் குறித்த வலைதள பக்கத்தை டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வலைத்தளம் மூலம் ரசிகர்களை தனது வலைதளத்தில் அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு பதிய கேட்டுக்கொண்டுள்ளார். திரையுலகில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ராகவா லாரன்ஸ் அவரும் தற்போது […]
ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும் இதற்க்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டு இருக்குகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில், கர்நாடகாவை ஒரு கன்னடன் தான் ஆளவேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ்நாட்டை ஆள நினைத்து பேசுவதை ஆதரிப்பது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும், இரு நிலைபாட்டோடு இருப்பதாகவும் கூறி […]
நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மன நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கருத்துக்கணிப்பினை நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனம் நடத்தியது. அதன் முடிவுகள் இதோ 40% ரஜினி நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பெறுவார் 33% கடும் தோல்வியடைந்து, டெபாசிட்டை இழப்பார் 17& பெரும்பான்மை பெறாமல் எதிர்கட்சியாகி, மக்களுக்கு […]
ஆர்.கே.நகரில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும். மேலும் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது எடுத்தாலும் தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஆர்.கே.நகரில் பேட்டியளித்துள்ளார். source: dinasuvadu.com
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உள்ளே சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியிலும் பல ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியை ஏந்தியபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ராகவேந்திரா திருமண […]
தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். source: dinasuvadu.com
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள், நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது. இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது. தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். […]
ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர். கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன். டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முக.ஸ்டாலின் : ரஜினி […]
ரஜினி தான் அரசியல் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடுவதாக இருந்தார். அதேபோல் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலில் இறங்குவதாகவும், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவருடமாக தமிழகம் மோசமாக செயல்பட்டதாகவும், இப்போதும் நான் ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்னை வாழ வைத்த தமிழ்மக்களுக்கு நான் செய்யும் துரோகம் அது தன்னை தூங்க விடாது எனவும் பேசினார். மேலும் […]