ரஜினிகாந்த் பெயரிலேயே காந்தம் வைத்துள்ள இந்த நபரை தெரியாத சினிமா ரசிகர்கள் இந்தியாவில் எவரும் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜிராவ். சினிமாவில் முதன் முதலாக இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். ஏற்கனவே தமிழ்சினிமாவின் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், இவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார். பெயரிலேயே காந்தம் இருப்பதாலோ என்னவோ ஆறிலிருந்து அறுபது வயது வரை பலதரப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் […]