கொரோனாவால் சிறையிலிருந்து விடுவிப்பது போல எழுவரையும் தமிழக அரசு ஏன் விடுவிக்க கூடாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதி தரும்படி நளினியின் தாயார் மனு தாக்கல் செய்த நிலையில், சிறைக்கைதிகள் வெளிநாட்டினருடன் பேசலாம் என்ற விதி இல்லை என்பதால் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டு உறவுகளுடன் பேச கூடாது என பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. […]