நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கத்தால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று நான்காவது நாளாக தொடங்கியது. அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்ற […]