ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடனே உயிரிழப்பதாக அந்த விசாரனை அமைப்பு அளித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்த உயிரிழப்பிற்க்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் […]