முடிவடைந்த 2 பிரபல தொடர்கள் மீண்டும் உங்கள் விஜய் டிவியில்!
பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடிய அனைத்து தொடர்களுமே மக்களால் விரும்பி பார்க்கப்பட கூடியது தான். இந்நிலையில், இதுவரை ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்த பிரபல தொடர்கள் தான் சரவணன் மீனாட்சி மற்றும் ராஜா ராணி. இந்நிலையில், நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த இரண்டு தொடர்களும் விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பப்பட உள்ளது.