சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது. திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையே வெடித்தது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை […]
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று சேலம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். […]
சென்னை:தனது வாகன பயணத்தின்போது பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று டிஜிபியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். ஆளுநர் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது பொது மக்கள் பாதிக்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னை ராஜ் பவனில் நேற்று (6-11-2021) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர […]
நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து எனஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மாலை முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்வு நடைபெறும். தற்போது, ஆளுநருக்கு ஏற்பட்ட கொரோனா […]
தமிழக ஆளுநர் மாளிகையில் இதுவரை 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணிநேரத்தில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பரவும் கொரோனா, ஆளுநர் அலுவலகத்தையும் விடவில்லை. தமிழக ஆளுநர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை […]
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 510 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் […]