சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆனால், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து […]