பீகாரில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
பருவமழை தீவிரமடைந்து வருவதால் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று மும்பையில் பருவமழை தொடங்கியது. முதல் நாள் பெய்த கனமழை காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளம் போல் காட்சியளித்தது. சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மும்பை நகரில் நேற்று காலை மிதமான மழையே பெய்துள்ளது. […]
புதுச்சேரி வடக்கே 16 கி.மீ வேகத்தில் மையப்பகுதியை கடந்து வரும் நிவர் புயலால் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நிவர் புயலால் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திண்டுக்கல், […]
ஆந்திராவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா எனும் பகுதியில் ஏற்பட்ட அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று ஆந்திராவில் 24 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மேலும் கடலில் நின்று கொண்டிருந்த கப்பல்கள், படகுகள் ஆகியவை கரைக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாக வலுப் பெற்றதால் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஜூன் 5ம் தேதி வரை ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை […]
அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார். மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் […]