சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி […]
சென்னை: கனமழை எதிரொலியால் தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,760 கன அடி நீர் […]
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 34.05 அடி நீர் உள்ளது. இதனால், மதியம் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]
மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் மழைக் காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதும், கொடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்கடாக காட்சியளிக்கின்றன. இருப்பினும் போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் மழைநீர் கடலில் வீணாக கலந்து வருகிறது. இதனால் […]
சென்னை:அதிமுக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.அந்த வகையில்,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் அவர்கள் 3-வது […]
சென்னை:கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு மழைநீர் தேங்காமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட […]
மும்பையில் பலத்த மழை காரணமாக வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மும்பையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மும்பையில், நேற்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாமல் தொடர்ந்து பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், இதனால் பல இடங்களில் […]
கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த மழையால், அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு. கடந்த சில காலங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், அங்கங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, நாகர்கோவில், மாம்பழத்துறையாரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சௌந்தரராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், குறும்பட இயக்குனரும் ஆவார். இவர் வேட்டை, சௌந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நானும் நந்தினியும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். உவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், சமூக சேவைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பெய்துவரும் மழையை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்களுக்கு, தண்ணீர் வழங்கி உதவி வரும் தனது ரசிகர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றும், இதற்காக […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நடிப்பு திறமையால், பலரை தன்வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்ல சமூக அக்கறை கொண்டவராகவும் உள்ளார். இந்நிலையில், இயற்கையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரும் கூட. இதனையடுத்து செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த நடிகர் விவேக், ” நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதை போன்று, மழைநீர் சேகரிப்பு குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.