தமிழகம்:மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று முதல் ஆய்வு செய்யவுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமா,சென்னை, காஞ்சிபுரம், கடலூர் திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம்,ரூ.2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை […]