சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின் உபயோகமானது உச்சத்தை எட்டியது. தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகபட்சமாக 21,000 மெகா வாட்டாக அதிகரித்தது. அதற்க்கு முக்கிய காரணம் கோடை காலத்தில் வெயில் தாக்கத்தால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி தான். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கோடை மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. […]