புதுச்சேரியில் மழை – வெள்ள பாதிப்பு குறைவுதான்,ஆனால்,அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதைப்போல,தமிழக அரசும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும் என்றும்,நோய் பரவலில் இருந்து கடலூர் மாவட்ட மக்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; […]
சென்னை:மழை வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புக்கு ஆளும் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி,அவர்களது மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வட கிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடலூர் […]
தமிழகம்:மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது,விவசாயிகள் இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழை பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் நிதியுதவி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக […]
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குறுவை – கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக,பயிர் மறுசாகுபடிக்கு இடுபொருட்கள் வாங்க ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.மழை வெள்ளத்தால் […]
மழை வெள்ளம் பாதித்த கொளத்தூர் பகுதியில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு […]