கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர். கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். பழைய பொருட்கள் மற்றும் குப்பைகள் குவிந்து இருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை […]
தமிழகத்தை பொறுத்தவரையில், ரயில் வழியாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரயில் பயணம், பேருந்தில் பயணம் செய்வதை விட கட்டணம் குறைவாக இருப்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில், முன்பதிவு செய்யக்கூடிய விண்ணப்ப படிவத்தில் தமிழ் இல்லாமல், ஆங்கில, இந்தி, மலையாளம் மட்டுமே இருப்பதால், இதுகுறித்து மக்கள் புகாரளித்துள்ளனர். மேலும், முன்பதிவு சிரமமாக இருப்பதாகவும், வஞ்சிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி, விண்ணப்பத்தில் தமிழை சேர்க்குமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.