ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவின் பூரி நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திட்லாகர் ((Titlagar)) ரயில் நிலையத்தில் மேலும் சில பெட்டிகளை இணைப்பதற்காக ரயில் எஞ்சின் கழற்றப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் பின்னோக்கிச் சென்றது. இவ்வாறு எஞ்சின் இல்லாமல் பெட்டிகள் மட்டும் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றன. […]