Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண் கஸ்தூரி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் அவருக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் […]