காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பிவண்டி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இந்தநிலையில் […]