ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகள் கவுரவர்களைப் போல் அதிகாரத்திற்காக சண்டையிடுவதாகவும், காங்கிரஸ் கட்சி பாண்டவர்களைப் போல் உண்மைக்காக போராடுவதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர்க்கே மகாபாரதத்தை உவமையாக வைத்து ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84 வது மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சரமாரியாக சாடினார். பாஜக என்பது ஓர் அமைப்பின் குரல் என்றும், காங்கிரஸ் என்பது மக்களின் குரல் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். குருட்சேத்திரப் போரில் […]