ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி கிடைக்காததால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் […]