தனது பிறந்தநாளை இன்று கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும்,பல பகுதிகளில் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம்,பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களுக்கு தீ வைத்தும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]