நாட்டை ஆளும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி இரண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக பாதித்துவிட்டது என்று ரகுராம் ராஜன் விமர்சித்து சாடியுள்ளார். அமெரிக்காவின் பெர்க்லேயில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருந்தரங்கில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி பேசினார்.அவர் பேசுகையில் […]