நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்பதால் அவருடைய வீட்டில் அந்த சம்மன் ஒட்டப்பட்டது. அதன்பிறகு அங்கு ஒட்டப்பட்ட சம்மன் அதை ஒருவர் கிழித்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பிறகு சீமான் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆஜரானார். […]
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது. இதை பார்த்து அதிமுக கலகலத்து போயுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்த அவர், பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் […]
Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் […]
அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். […]