சொத்து வரி விவகாரத்தில் தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் […]