டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. கடைசியாக பிரிஸ்பேனில் நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் ஆட்டம் முடிவில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென தனது ஓய்வை அறிவித்தார். 38 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அதிகளவில் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே போல டெஸ்ட் போட்டிகளில் ஒரு […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது ” என்னுடைய சாதனையை முறியடித்துவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவார் என நினைத்தேன் ஆனால், அவருடைய முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது” என பேசியிருந்தார். அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இது வரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 38-வயதான அவர் இந்த டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்றால் கூட ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. ஆனால், திடீரென இப்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு […]
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இதுவரை இல்லாத பல்வேறு சுவாரஸ்யங்களை சுமந்து கொண்டு ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளது. சென்னை அணிக்கு திரும்பிய அஷ்வின், சாம் கரன், விஜய் சங்கர், டெல்லிக்கு புதிய கேப்டனாகும் கே.எல்.ராகுல், லக்னோ அணிக்கு கேப்டனாகும் ரிஷப் பண்ட், மும்பை அணி கேப்டன்சி என பல்வேறு சர்பிரைஸ்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. அதேபோல, இதுவரை கோப்பைகளை வெல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான அணிகளில் முக்கிய இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]
கொஞ்சம் பயமுறுத்துவது போல் போட்டி சென்றால் டிவியை அனைத்து விடுவேன். -இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் போட்டியை தாண்டி , தனக்கென தனி யூ-டியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது கிரிக்கெட் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருவார். அவர் அண்மையில், ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எப்போதும் எனக்கு பிடித்தது ஏற்ற இறக்கங்கள் தான். அது […]
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், 870 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான டி-20 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் வகித்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 129 ரன்கள், எடுத்ததால் அவர் தரவரிசையில் […]
இந்திய கிரிகெட் அணியின் சுழற்பந்து வீரர் அஸ்வின் டெஸ்ட் தொடரில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படித்துவருகிறார். இந்த சாதனையை வெறும் 54 டெஸ்ட் போட்டிகளில் அவர் நிகழ்த்தியுள்ளார். இதனை குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘300 விக்கெட்டுகளை இரட்டிப்பாக்கி 600 விகேட்டுகளை வீழ்த்துவதே எனது லட்சியம் அது என்னால் முடியும்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனாலும் அவர் ஒருநாள் கிரிகெட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்.