சென்னை:தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் இன்று நேரலை செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது.இதனையடுத்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மற்றும் நாளை விவாதம் நடக்கிறது என்றும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார்.கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என அலுவல் […]