#Viral:ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி அருகே மயங்கி விழுந்த காவலர்!!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் மயங்கி விழும் வீடியோ வைரலாகியுள்ளது. தேசிய கொடியால் மூடப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி 900 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது இறுதிச் சடங்கிற்கு முன் நான்கு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும்,கிட்டத்தட்ட 6 கிமீ தொலைவுக்கு லண்டனில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று,ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வியாழன் அன்று ​​ராணியின் சவப்பெட்டிக்கு அருகில் காவலில் நின்றிருந்த காவலர்களில் … Read more

எலிசபெத் மகாரணி மறைவு! இன்று இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு!!

இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அதிகாரபூர்வமாக நேற்று பதவியேற்றார். இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கபடுவதாக செப்டம்பர் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.மேலும், இன்று அரசு நிகழ்ச்சிகள் எதுவும் … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக காத்திருந்த மன்னரின் உடல்

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலும், ஒன்றறை வருடங்களுக்கு முன் இறந்த அவரது கணவரான பிலிப்பின் உடலும் அருகருகே அரசு … Read more

இந்த நாள் வரும் என்று எனக்குத் தெரியும்: இளவரசர் வில்லியம்

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளவரசர் வில்லியம், உலகம் ஒரு தலைவரை இழந்த நிலையில், “நான் எனது பாட்டியை இழந்துவிட்டேன்” என்று கூறினார். பிரிட்டனின் இளவரசர் வில்லியம், இரண்டாம் எலிசபெத் ராணி இனி இல்லாத “இந்த நாள் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் ராணியின் மறைவைக் குறிப்பிட்டார். பாட்டி (இரண்டாம் எலிசபெத்) இல்லாத வாழ்க்கையை உண்மையாக உணருவதற்கு சில காலம் ஆகும் என்றும் கூறினார். 40 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மேலும் கூறுகையில், “என்னால் … Read more

ராணி எலிசபெத் மறைவு… புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ்.! வரலாற்றில் இதுவே முதல்முறை.!

இங்கிலாந்து மன்னராக 73 வயதான 3ஆம் சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அதிக வயதில் இங்கிலாந்து மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு வயது 96. இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 73 … Read more

ஆரோக்கியமாக வாழ ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ்!!

Elizabeth II

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 96 வயது வரை ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆரோக்கியமான வாழ்வில் மிக முக்கிய பங்குவகிப்பது அவரின் உணவு முறை தான். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஃபிரஷ்ஷான உணவுகள் … Read more

#viral: $12,000 டாலருக்கு விற்க்கப்பட்ட ராணி எலிசபெத் II பயன்படுத்திய டீபேக்

ராணி எலிசபெத் II 1998 இல் பயன்படுத்திய ஒரு டீபேக், அவரது மரணத்திற்குப் பிறகு eBay இல் 12,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது. பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். மேலும் 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது 70 ஆண்டுகால ஆட்சியை … Read more

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக 96 வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,”2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணங்களின் போது அவரது மாண்புமிகு ராணி இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் மறக்க முடியாது” என்று ட்வீட் செய்துள்ளார். இரண்டாம் எலிசபெத் ஒரு கம்பீரமானவராக நினைவுகூரப்படுவார்,அவர் தனது … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம்! பிரிட்டனின் புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பதவியேற்பு!!

பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் ராணி, 96 வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இருப்பினும், சார்லஸின் முறையான முடிசூட்டு விழாவிற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி … Read more

#BigBreaking:பிரிட்டனின் மிக நீண்ட கால மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். வியாழன் அன்று, பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையை வெளியிட்டது,அதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலக்குறைவு காரணமாக நடக்கவும், நிற்கவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சற்று முன் காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் … Read more