காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர் செட்டில் வெளியீடு! கல்வியாளர்கள் அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவர்கள் மாதிரிவினாத்தாள், முக்கிய வினாக்கள் என அனைத்திலும் கவனம் செலுத்தி படித்து வருகின்றனர். இதில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு வினாத்தாள் 2 நாட்கள் முன்னதாகவே ஷேர்சேட் இணையதளத்தில், கல்வி மற்றும் தொழில்நுட்பம் எனும் பக்கத்தில் வினாத்தாள் வெளியிடுவதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து, விசாரிக்கையில் நேற்று நடைபெற்ற 11 ஆம் வகுப்பு தேர்வுத்தாளின் வினாத்தாள், நேற்று முன்தினமே வினாத்தாள் ஷேர்சேட் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது […]