தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில்,நல்ல தரமான ரேசன் பொருட்கள் மட்டுமே நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலர்(கன்வீனர்), முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்),கூட்டுறவு இணைப் பதிவாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (சிவில் சப்ளைஸ் சிஐடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். […]
நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையில் நூலின் தரம் ஏன் சோதிக்கப்படுவதில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 250 கோடி மதிப்பில் நூல் வாங்கப்படுகிறது எனவும், இதில் தரமற்ற நூல் நெசவாளர்களுக்கு வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி சேலைகளை உற்பத்தி செய்யக் கூடிய நிலைமை ஏற்படுகிறது எனவும் நெசவாளர்களுக்கு பயனாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் […]