மேகலயாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய புவியியல் மையம் இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.