மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு மிக பெரிய பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவைகள் கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், […]
புதுசேரி மாநில பொதுப்பணிதுறை அமைச்சரின் உதவியாளரான கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதியவாசியா தேவை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுசேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் மீது ஊரடங்கை மீறியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளது. அவர் […]
புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களையும், மாணவர்களையும் கல்விக்கட்டணம் செலுத்த கோரி நிர்வாகம் நிர்பந்திக்கக் கூடாது – புதுசேரி கல்வித்துறை கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புதுசேரியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். புதுசேரியிலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், பலர் வேலையின்றி தவித்து வருவதால், புதுச்சேரியில் […]
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் அவரவர் வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி, ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாத செலவினங்களுக்காக ரூ.2042 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டாக பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேரவையில் உரையாற்றிய முதல்வர் கொரோனா வைரஸ் பரவலைத் […]
புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.தமிழகம் மட்டும் அல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் […]
புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கூட்டாட்சி தத்துவபடி துணைநிலை ஆளுநரும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி வரும் காலங்களில் புதுச்சேரியில் இப்போது நடைபெறும் ஆய்வு போலவே எப்போதும் நடைபெறும் தெரிவித்தார். மேலும் பொதுப்பணித்துறையில் நடக்கும் மிகப்பெரிய திட்டத்தை ஆய்வு செய்யவுள்ளதாகவும், திட்ட மேலாளர், திட்டத்தின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் […]
எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார். ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக […]
ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் பலப்படுத்த ” சக்தி ‘ என்ற செயலி நாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று சக்தி என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அப்போது ராகுல் காந்தி பிரதமராவார் . அதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் முழக்க மிட்டு வருகிறார்கள். இதன்படி ஒவ்வொரு மாநிலமாக பாரதீய ஜனதா கைப்பற்றி வருகிறது. கடைசியாக 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தையும் கைப்பற்ற பாரதீய ஜனதா முயற்சித்தது. ஆனால், சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பஞ்சாப், மிஜோரம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவற்றையும் எப்படியாவது அகற்ற […]
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.. அதேபோன்று தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் சுனாமியால் பலியானவர்களுக்கான 13 ஆம் ஆண்டு நினைவுதின அமைதிப்பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை மீனவர்கள், பொதுமக்கள் பேரணி செல்கின்றனர்.