புதிய கல்வி கொள்கை பற்றி சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். அது தவறு. விரைவில் புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் கூறியுள்ளார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, காரைக்காலில், இந்திய விண்வெளி அறிவியல் மையமான இஸ்ரோ சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘ புதுசேரியில் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் […]
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர். புதுச்சேரியில் மின்சாரத்துறையை அரசு தனியார்மயமாக்கும் முடிவில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் தனியார்மயமாக்கல் குறித்து டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் பேட்டி. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை தடுக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோயில்களில் நடைபெறக்கூடிய தவறுகளை தடுக்கும் பணியைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். மத அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டினார். மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது […]
புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த கடற்கரை திருவிழாவில் கடற்சார்ந்த விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலைநாட்டு இசை நிகழ்ச்சிகள் ஆகவே நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமிழில் உரையாற்றி வருகிறார். இக்கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றிய பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தமிழிசை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டது. தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 5-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 […]
வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல். புதுச்சேரியில், யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில், புதுச்சேரியில் கடைகள் காலை 5 மணி முதல் 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காலை 7 மணி முதல் இரவு 7 மணி […]
புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிதி நெருக்கடியை சமாளிக்க சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதில் மின்சாரத்துறையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் தற்போது ஜூன் 1 முதல் புதிய மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் மின் விநியோகம் தனியாரிடம் கொடுக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் […]
திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. புதுச்சேரி, திருநள்ளாறு நகராட்சிக்கு உட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஒட்டி ஒருவர் தகராறில் ஈடுபட்டதற்காக திருநாள்ளாறு காவலர்களால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் வசித்து வந்த கிராமம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும், அவரை […]
காரைக்காலில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புதுச்சேரி யூனியனில் காரைக்கால் புறவழிச்சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் அருகே ஒரு வீட்டில் சட்ட விரோதமான போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கலால் மற்றும் காவல்துறையினர், அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையை […]
தனியார் மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மறுத்த மூன்று மர்ம நபர். புதுச்சேரியில் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய 3 ரௌடிகள், சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி திருபுவனை, திருவண்டார்கோயில் கொத்தபுரிநத்தத்தில் தனியார் மதுபான கடை பார் வசதியுடன் அமைந்துள்ளது. ஞாயிற்றுகிழமை இரவு 3 பேர் மதுக்கடைக்கு வந்து பல்வேறு பிராண்ட் சரக்குகளை வாங்கி அருந்தினர். இறுதியில் பணம் தராமலேயே கடையைவிட்டு கிளம்ப முயற்சித்தனர். அவர்களிடம் பணம் கேட்ட போது […]
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார். இந்நிலையில், கடந்த சில […]
எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியை அடுத்த தருமாபுரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுகள் மேலாகியுள்ள இப்பள்ளியில் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களால் […]
வரும் 26 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.முதலமைச்சர் நாராயணசாமி அன்றைய தினத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதுச்சேரியில் சில ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட்டுக்கு பதில், அரசின் செலவினங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்படும். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.